மாவட்ட செய்திகள்

பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 22 ஆயிரம் பேர் வருகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல் + "||" + 22 thousand people visit Thoothukudi from other districts - Collector Sandeep Nanduri

பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 22 ஆயிரம் பேர் வருகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு 22 ஆயிரம் பேர் வருகை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 22 ஆயிரம் பேர் வந்து உள்ளனர் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 16 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேர் இறந்து உள்ளனர். மராட்டியம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து 398 பேர் தூத்துக்குடி வந்து உள்ளனர். இதில் 185 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடந்த 2 வாரத்தில் துக்க வீடு, திருமண வீட்டுக்கு வந்தவர்கள் மூலம் 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்திருப்பேரை, காயல்பட்டினம் ஆகிய பகுதிக்கு அதிகம் பேர் வந்து உள்ளனர். இவர்களுடன் நேரடி தொடர்புடைய 50 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.

22 ஆயிரம் பேர்

கடந்த மே மாதம் 4-ந் தேதி முதல் வெளிமாநிலத்தில் இருந்து இதுவரையிலும் 3 ஆயிரத்து 568 பேர் வந்து உள்ளனர். மராட்டிய மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 685 பேர் வந்து உள்ளனர். இதில் 158 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து மே மாதம் 4-ந்தேதி முதல் இதுவரையிலும் 8 ஆயிரத்து 396 பேர் வந்து உள்ளனர். மற்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 14 ஆயிரம் பேர் தூத்துக்குடி வந்து உள்ளனர். ஆக மொத்தம் 22 ஆயிரத்து 396 பேர் வந்து உள்ளனர்.

விழிப்புணர்வு

கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதனால் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் சளி மாதிரி பரிசோதனை செய்ய ஏற்கனவே ஒரு எந்திரம் உள்ளது. தற்போது புதிதாக ரூ.15 லட்சம் செலவில் மேலும் ஒரு எந்திரம் வாங்கப்பட உள்ளது.

தூத்துக்குடியில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து மோட்டார் சைக்கிளில் வரும் சில நபர்கள் சோதனைச்சாவடியில் சோதனைக்கு உட்படாமல் ரகசியமாக ஊருக்குள் நுழைந்து விடுகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் புதிதாக வந்த நபர்கள் குறித்து போலீசாருக்கோ, சுகாதார துறையினருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

நடவடிக்கை

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் 1,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. திருச்செந்தூர், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 இடங்களில் தனிமைப்படுத்தும் மையம் தயார் நிலையில் உள்ளது. போலி இ-பாஸ் மூலம் வருபவர்களை தடுப்பதற்காக, மாவட்ட எல்கை பகுதிகளில் கியூ.ஆர். ஸ்கேனர் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஸ்கேன் செய்யும்போது போலி இ-பாஸ் என்பது தெரிய வந்தால், சம்பந்தபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் - புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என்று புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
2. “எடை குறைந்த யூரியா உர மூட்டைகளை மாற்ற நடவடிக்கை” - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் எடை குறைந்த யூரியா உர மூட்டைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
3. “தரிசு நிலங்களை மேம்படுத்தி விளைநிலங்களாக மாற்றும் திட்டம்” - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தி விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
4. அரசு இணையதளத்தில் பதிவு செய்து தனியார் நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
அரசு இணையதளத்தில் பதிவு செய்து, தனியார் நிறுவனங்களில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறலாம் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
5. சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அதிகம் வாசிக்கப்பட்டவை