சேலத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்த 49 ஆயிரம் பேரிடம் ரூ.44½ லட்சம் அபராதம் வசூல்


சேலத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்த 49 ஆயிரம் பேரிடம் ரூ.44½ லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 16 Jun 2020 3:15 AM IST (Updated: 16 Jun 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வந்த 49 ஆயிரம் பேரிடம் இதுவரை ரூ.44½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம், 

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் முக கவசம் அணியாமல் வருபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இக்குழுவினர் மேற்கொண்ட தணிக்கையின் போது இதுவரை சூரமங்கலம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 469 பேரிடம் இருந்து ரூ. 9 லட்சத்து 82 ஆயிரத்து 600 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அஸ்தம்பட்டி மண்டலத்தில் 13 ஆயிரத்து 29 பேரிடமிருந்து ரூ.12 லட்சத்து 91 ஆயிரத்து 185-ம், அம்மாபேட்டை மண்டலத்தில் 12 ஆயிரத்து 690 பேரிடமிருந்து ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 400 மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 11 ஆயிரத்து 511 பேரிடமிருந்து ரூ. 10 லட்சத்து 42 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி முழுவதும் கடந்த 60 நாட்களில் மொத்தம் 49 ஆயிரத்து 699 பேரிடமிருந்து ரூ.44 லட்சத்து 47 ஆயிரத்து 385 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story