சைக்கிள் மீது மோட்டார்சைக்கிள் மோதல்: இறைச்சி வியாபாரி உள்பட 2 பேர் பலி


சைக்கிள் மீது மோட்டார்சைக்கிள் மோதல்: இறைச்சி வியாபாரி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2020 6:58 AM IST (Updated: 16 Jun 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

சைக்கிள் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இறைச்சி வியாபாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் ஜலால் பாஷா(வயது 27). இறைச்சி வியாபாரியான இவர், தனது நண்பரை பார்க்க மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் பகுதிக்கு வந்தார். அம்பாள் நகர் சிக்னல் அருகே வந்தபோது, அதே பகுதியில் தங்கி அங்குள்ள தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விஷால்(24) என்பவர் வந்த சைக்கிள் மீது வேகமாக வந்த இறைச்சி வியாபாரியின் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் சைக்கிளில் வந்த வடமாநில தொழிலாளி விஷால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இறைச்சி வியாபாரி ஜலால் பாஷா தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜலால் பாஷாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story