சென்னையில் கொரோனா வைரஸ்: பிற நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு


சென்னையில் கொரோனா வைரஸ்: பிற நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2020 7:04 AM IST (Updated: 16 Jun 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இங்கிருந்து பிற நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆலந்தூர்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்ட பிறகு கடந்த மாதம் 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்களின் எண்ணிக்கை 25-க்குள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னைக்கு வரக்கூடிய விமானங்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 20 நாட்களில் 490 விமானங்கள் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு புறப்பட்டு சென்றன. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்று உள்ளனர். அதேபோல் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் 33 ஆயிரம் பேர் வந்து உள்ளனர்.

சென்னையில் இருந்து நேற்று டெல்லி, ஐதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரம், மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி உள்பட பல்வேறு நகரங்களுக்கு 30 விமானங்கள் சென்றன. இதில் 3,700 பேர் பயணம் செய்து உள்ளனர். அதேபோல் இந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த விமானங்களில் 1,700 பேர் மட்டும் பயணம் செய்தனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னையில் தங்கி உள்ள பிற மாநிலங்கள், மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா அச்சத்தினால் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக கொல்கத்தா, கவுகாத்தி, ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரூ போன்ற விமானங்களில் அதிகமான பயணிகள் செல்கின்றனர்.

ஆனாலும் விமானங்களில் சமூக இடைவெளியை கைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து இருப்பதால் சென்னையில் இருந்து செல் லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. சில முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங் களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

Next Story