மாவட்ட செய்திகள்

5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி: கூட்டாளியுடன் காசியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர் + "||" + Court cleared for 5 days Police have launched an investigation

5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி: கூட்டாளியுடன் காசியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்

5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி: கூட்டாளியுடன் காசியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்
காசி, அவரது கூட்டாளியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
நாகர்கோவில்,

நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் போலீஸ் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் போக்சோ வழக்கு உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


இந்த வழக்குகள் தொடர்பாக காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் பல பெண்களை ஏமாற்றியதால் காசி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும், காசிக்கு உறுதுணையாக அவருடைய நண்பர்கள் 2 பேர் இருந்துள்ளனர். அதையடுத்து அவர்களில் ஒருவரான நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ என்பவரை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் உள்ள மற்றொருவரை தேடி வருகின்ற னர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இதற்கிடையே பெண்களின் வாழ்வை சீரழித்த காசி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

பின்னர் காசி மீதான 6 வழக்குகளின் விசாரணை ஆவணங்களும் நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டன. உடனே சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

5 நாட்கள் காவல்

இந்த நிலையில் சிறையில் உள்ள காசி, அவருடைய நண்பர் டேசன் ஜினோவை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 12-ந் தேதி நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை 15-ந் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதி கூறினார். அதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோ இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மனு தாக்கல் செய்தார். அதில், காசி மற்றும் டேசன் ஜினோவை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து நீதிபதி கிறிஸ்டியன் வருகிற 19-ந் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் யாசின் முபாரக் அலி ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியதால் காசியை பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. இயக்குனர்-மனைவி செல்போன் எண்கள் ஆபாச இணையதளத்தில் பதிவு தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு
பெங்களூருவில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் தர தாமதப்படுத்தியதால், தனியார் நிறுவன இயக்குனர், அவரது மனைவியின் செல்போன் எண்களை ஆபாச இணையதளத்தில் பதிவு செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. கொரோனா தொற்று குறித்த புள்ளிவிவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. வழக்கு
கொரோனா வைரஸ் தொற்று குறித்த முழுமையான புள்ளி விவரங்களை மாவட்ட வாரியாக வெளியிட கோரி தி.மு.க., எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற கூடாது; ஐகோர்ட்டில் ஜெ.தீபா மீண்டும் வழக்கு
ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதால் அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் ஜெ.தீபா மீண்டும் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
4. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவு? போலீசார் விசாரிக்க சென்றபோது வீட்டில் இல்லை
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க பாட்னா போலீசார் மும்பை வந்தனர். நடிகை ரியா சக்ரபோர்த்தி வீட்டுக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை.
5. பேய்க்குளம் வாலிபர் உயிரிழந்த வழக்கு: உறவினர்-நண்பர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
பேய்க்குளம் வாலிபர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உறவினர்கள், நண்பர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.