மதுரையில், 2 குழந்தைகள் உள்பட 20 பேருக்கு கொரோனா
மதுரையில் 2 குழந்தைகள் உள்பட 20 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை,
மதுரையில் நேற்று 20 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன், டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த 50 வயது மூதாட்டி, .கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 59 வயது முதியவர், சிந்தாமணி பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை, கோ.புதூர் பகுதியை சேர்ந்த 50 வயது பெண் மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை, திருப்பாலை பகுதியைச் சேர்ந்த 28 வயது வாலிபர், மதிச்சியம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் மற்றும் 19 வயது வாலிபர், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயது நபர், எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த 44 வயது ஆண் மற்றும் 75 வயது முதியவர், பி.பீ.குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி, முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த 88 வயது மூதாட்டி, மேலமடை பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர், உத்தங்குடி பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர், திருமங்கலம் கரடிக்கல் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர், சமயநல்லூர் பொதும்பு பகுதியை சேர்ந்த 39 வயது வாலிபர் ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.
இதுபோல் மதுரை பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியை சேர்ந்த 26 வயது பெண் மற்றும் வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தவர்கள். இவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் வைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்தனர். அதில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபோல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 88 வயது மூதாட்டி நேற்று இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர 2 பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள். இதுபோல் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் 19 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் தங்கியிருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சையில் இருந்த மதுரையை சேர்ந்த 10 பேர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story