திருவாரூர் மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்


திருவாரூர் மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 17 Jun 2020 6:16 AM IST (Updated: 17 Jun 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று டீக்கடை உரிமையாளர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

திருவாரூர்,

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களில் பலருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வெளியூரில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர், சென்னையில் இருந்து வந்த கொக்கலாடியை சேர்ந்த 41 வயது நபர், செம்மங்குடியை சேர்ந்த 39 வயது பெண், தனிக்கோட்டையை சேர்ந்த 14 வயது சிறுமி, நன்னிலம் கீரனூரை சேர்ந்த 62 வயது நபருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டீக்கடை உரிமையாளர்கள்

இதேபோல் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த 44 வயது நபர், மன்னார்குடி அசேஷம் பகுதியை சேர்ந்த 45 வயது நபர் ஆகிய 2 டீக்கடை உரிமையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 85 பேர் மட்டுமே திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story