செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது


செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 17 Jun 2020 7:10 AM IST (Updated: 17 Jun 2020 7:10 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 88 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூரை சேர்ந்த 30 வயது வாலிபர், இளவழகனார் தெருவில் வசிக்கும் 33 வயது வாலிபர், மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோர் கொரோனா பாதிப்படைந்துள்ளனர்.

அதே போல் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் குலசேகரன் அவென்யூ, பாரதி நகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண், ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த 42 வயது ஆண், கூடுவாஞ்சேரி வீரபத்திர நகரை சேர்ந்த 54 வயது பெண், காயரம்பேடு சவுபாக்கிய நகருக்குட்பட்ட 27 வயது இளம்பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,108 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,501 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று 60 வயது மூதாட்டி, 55 வயது ஆண், 52 வயது பெண் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.

அதே போல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 46 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

இதனால் மாவட்ட முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 803 ஆக உள்ளது.

இவர்களில் 440 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ள நிலையில், 355 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிப்படைந்த நிலையில், மாவட்ட முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1945 ஆக உயர்ந்தது. இதில் 914 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

1001 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 30 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story