கொரோனா நோயாளிகளை கவனிக்க ஊழியர்கள் பற்றாக்குறை: ராயபுரம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம்.மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கவனிக்க ஊழியர்கள் இல்லாததை கண்டித்து, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரியில் வடசென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் நோயாளியின் உறவினர்கள் உள்பட யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் மருத்துவமனை கொரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகளை கவனிக்க ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை முன்பு திடீர் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து போலீஸ் உதவி ஆணையர் தினகரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கர்ப்பிணிகள் சிகிச்சை பெறும் கொரோனா வார்டில் அதிகளவில் நர்சுகள்கள் பணியமர்த்தப்படுவதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஆர்.எஸ்.ஆர்.எம்.மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Tags :
Next Story