நாட்டறம்பள்ளி அருகே தையல் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை போலீஸ் விசாரணை
நாட்டறம்பள்ளி அருகே தையல் தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரை சுட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்துபோலீசார் தீவிர விசாரணை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாட்டறம்பள்ளி,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி தாலுகா கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி போத்தகுட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53), பச்சூரில் தையல் கடை நடத்தி வந்தார். இவர், கடந்த 4-ந்தேதி நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஜெயந்திபுரம் பகுதியில் ரத்தகாயத்துடன் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது முதுகில் 2 குண்டுகள் பாய்ந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் டெய்லரை சுட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. அவரை சுட்ட மர்ம நபர்கள் யார்? எதற்காக சுட்டனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story