மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சாவு - கொலை வழக்காக மாற்றம் + "||" + Near Thoothukudi Worker's death on sickle cut Transition into murder

தூத்துக்குடி அருகே, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சாவு - கொலை வழக்காக மாற்றம்

தூத்துக்குடி அருகே, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி சாவு - கொலை வழக்காக மாற்றம்
தூத்துக்குடி அருகே அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலைமுயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்தவர் சாத்தன். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தன், மூத்த மகள் வசந்தாவின் பெயரில் உயில் எழுதி வைத்தாராம். இதனால் அவருடைய தம்பிகள் காசி (வயது47), போஸ், சகோதரி தங்கலட்சுமி ஆகியோர் வசந்தா குடும்பத்தாரிடம் பேசாமல் இருந்து வந்தனர். கூலி தொழிலாளியான காசி, சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வசந்தாவின் மகள் கல்லூரி மாணவி பரிபூரண முத்துலட்சுமி(19) என்பவர், போஸ் குடும்பத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் போஸ், காசி, அவருடைய மகன் சதீஷ்குமார் ஆகியோர் வசந்தாவின் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டார்களாம். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரம் அடைந்த வசந்தா, அவருடைய கணவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து காசியையும், அவருடைய மகன் சதீஷ்குமாரையும் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த காசி, சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தி, வசந்தா, அவர்களுடைய மகள் பரிபூரண முத்துலட்சுமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கொலை வழக்கு

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த காசி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி அருகே பரபரப்பு: கியாஸ் சிலிண்டர் வெடித்து விசைப்படகில் பயங்கர தீ - கடற்கரையில் நின்ற லாரியும் எரிந்து நாசம்
தூத்துக்குடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து விசைப்படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடற்கரையில் நின்ற லாரியும் எரிந்து நாசமானது.
2. தூத்துக்குடி அருகே ரூ.20 லட்சத்தில் குளம் தூர்வாரும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி அருகே ரூ.20 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று தொடங்கி வைத்தார்.
3. தூத்துக்குடி அருகே பொட்டல்காட்டில் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
தூத்துக்குடி அருகே பொட்டல்காட்டில் மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
4. தூத்துக்குடி அருகே பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம்
தூத்துக்குடி அருகே பொதுமக்கள் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
5. தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி
தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.