மாவட்ட செய்திகள்

திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடி மோசடி வியாபாரிகள் போலீசில் புகார் + "||" + Rs 23 crore fraudulent traders run by a ticket company in Trichy

திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடி மோசடி வியாபாரிகள் போலீசில் புகார்

திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடி மோசடி வியாபாரிகள் போலீசில் புகார்
திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.23 கோடிவரை மோசடி செய்யப்பட்டதாக போலீசில் வியாபாரிகள் நேற்று புகார் அளித்தனர்.
திருச்சி,

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு வந்து, புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “திருச்சி காந்திமார்க்கெட், தாராநல்லூர், இ.பி.ரோடு, தேவதானம், கருவாட்டுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளான எங்களிடம், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து சீட்டு நிறுவனம் நடத்தி பணம் வசூல் செய்தார்.


ரூ.23 கோடி மோசடி

நாங்கள் சில ஆண்டுகளாக சேமித்து வைத்து இருந்த பணத்தை அவரிடம் செலுத்தி வந்தோம். முழுத்தொகையை செலுத்திய பிறகு, எங்களுடைய சீட்டு தொகையை திரும்ப கேட்டபோது, அவர் தர மறுத்ததோடு, தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதுவரை ரூ.23 கோடி வரை வியாபாரிகளிடம் மோசடி செய்து இருக்கலாம் என தெரிகிறது. ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்” என்று கூறி இருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரது மனைவி போலீசில் புகார்
நடிகை வனிதாவை திருமணம் செய்துகொண்ட பீட்டர் பால் மீது அவருடைய மனைவி, வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
2. ஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறியதாக புகார்: 100 மீட்டர் உலக சாம்பியன் கோல்மேன் இடைநீக்கம் - தடை விதிக்கப்பட வாய்ப்பு
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் உலக சாம்பியனான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
3. தஞ்சையில், வீட்டிற்கு தீ வைப்பு: மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 பவுன் நகைகள் உருகியதாக பெண் புகார்
தஞ்சையில், வீட்டிற்கு தீ வைத்ததில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 20 பவுன் நகைகள் உருகியதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. நிதி நிறுவனங்கள் தவணை தொகையை வசூலிப்பதாக புகார்: சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
குடவாசல் பகுதிளில் நிதி நிறுவனங்கள் தவணை தொகையை வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
5. கல்லூரி மாணவி கவுரவ கொலை? காதலன் பரபரப்பு புகார்
கல்லூரி மாணவி கவுரவக்கொலை செய்யப்பட்டதாக அவருடைய காதலன் போலீஸ் சூப்பிரண்டிடம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.