தானேயில், 1,024 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார்


தானேயில், 1,024 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 17 Jun 2020 10:00 PM GMT (Updated: 18 Jun 2020 2:59 AM GMT)

தானேயில் 1,024 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று திறந்து வைத்தார்.

மும்பை,

தானேயில் 1,024 படுக்கை வசதியுடன் கூடிய பிரத்யேக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தை நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

‘‘கொேரானாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதை தீவிரப்படுத்தப்படுத்த வேண்டும். இது தானே, மும்பை மாநகராட்சி கமிஷனர்களின் பொறுப்பு. நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்ததால் தான் தாராவி, மாலேகாவில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதை மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் செய்ய முடியும்.

கடந்த 2 மாதங்களில் 100 ஆய்வகங்கள் மற்றும் லட்சக்கணக்கில் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம். தானே கொரோனா சிகிச்சை மையம் தற்காலிகமானது தான். இதில் மருத்துவ வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய பல உபகரணங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தானே மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மாநகராட்சி கமிஷனர் விஜய் சிங்கால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தானேயில் 10 மாடி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. மேலும் 76 அவசர சிகிச்சை படுக்கைகள் என மொத்தம் 1,024 படுக்கை வசதிகளும், 10 டயாலிசிஸ் யூனிட்களும் இருக்கிறது. இதுதவிர தேவைப்பட்டால் கூடுதலாக 300 படுக்கைகள் அமைத்து கொள்ளலாம்.

இதே போல இந்த சிகிச்சை மையத்தில் உடல்பரிசோதனை மையம், ெகாரோனா பரிசோதனை மையம் போன்றவைகளும் உள்ளன.

Next Story