மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா 142 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா 142 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 Jun 2020 10:56 PM GMT (Updated: 19 Jun 2020 10:56 PM GMT)

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 142 பேர் பலியானார்கள்.

மும்பை, 

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நேற்று மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் 3 ஆயிரத்து 827 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 331 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மாநிலத்தில் மேலும் 142 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானாா்கள். இதனால் மராட்டியத்தில் நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 893 ஆக அதிகரித்து உள்ளது. 62 ஆயிரத்து 773 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 55 ஆயிரத்து 651 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

114 பேர் பலி

மும்பையில் நேற்று புதிதாக 1,264 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 139 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மும்பையில் புதிதாக 114 ேபர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் நகரில் வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 425 ஆக அதிகரித்து உள்ளது. மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே - 22,033 (675 பேர் பலி), பால்கர் - 3,029 (88), ராய்காட் - 2,267 (89), நாசிக் - 2,515 (137), அவுரங்காபத் - 3,164 (176), அகோலா - 1,145 (56), நாக்பூர் - 1,191 (13), ஜல்காவ் - 2,118 (179), சோலாப்பூர் 2,113 (185).

Next Story