சிவசேனா தொண்டர்கள் எந்த நெருக்கடிக்கும் பயப்பட மாட்டார்கள் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு


சிவசேனா தொண்டர்கள் எந்த நெருக்கடிக்கும் பயப்பட மாட்டார்கள் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 20 Jun 2020 5:26 AM IST (Updated: 20 Jun 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனா தொண்டர்கள் எந்த நெருக்கடிக்கும் பயப்படமாட்டார்கள் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.

மும்பை,

சிவசேனாவின் 54-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அக்கட்சி தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஆன்லைன் மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிவசேனா அநீதியை எதிர்த்து போராடுவதற்காக பிறந்தது. தந்தை பால்தாக்கரேயின் மரபுகளை முன்னோக்கி எடுத்து செல்கிறது. நான் முதல்-மந்திரி ஆன பிறகு கட்சி தொண்டர்கள் உடனான தொடர்பு குறைவாகவே இருந்து இருக்கலாம். ஆனால் ஒருபோதும் உங்களிடம் இருந்து என்னை பிரித்து கொள்ள மாட்டேன்.

சிவசேனாவினர் எந்தவொரு நெருக்கடிக்கும் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்காக உழைக்கிறார்கள்.

அஞ்ச மாட்டேன்

புயல் வந்தாலும், சூறாவளி வந்தாலும், வேறு எந்த பிரச்சினைகள் வந்தாலும் உங்களை போன்ற தொண்டர்கள் இருக்கும் வரை நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியுடனான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறேன். மராட்டியம் நெருக்கடி நேரத்தில் இமயமலையுடன் இருக்கும். மாநிலத்தில் ஆரம்பத்தில் 2 ஆக இருந்த கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை தற்போது 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நோயை எதிர்த்து போராடும் டாக்டர்களுக்கு தேவையான முககவசம், பி.பி.இ. கருவிகள் மற்றும் கையுறைகள் என அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story