காயல்பட்டினத்தில் கொரோனாவுக்கு பலியான முதியவரின் உடல் அடக்கம் நடந்தது


காயல்பட்டினத்தில் கொரோனாவுக்கு பலியான முதியவரின் உடல் அடக்கம் நடந்தது
x
தினத்தந்தி 21 Jun 2020 4:30 AM IST (Updated: 21 Jun 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் கொரோனாவுக்கு பலியான முதியவரின் உடல் அடக்கம் நடந்தது.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நயினார் தெருவைச் சேர்ந்த 60 வயதான முதியவர் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதையடுத்து அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊரான காயல்பட்டினத்துக்கு நேற்று அதிகாலையில் சுகாதார துறையினர் எடுத்து சென்றனர்.

அங்குள்ள பெரிய பள்ளிவாசல் கல்லறை தோட்டத்தில், அரசு விதிமுறைகளின்படி ஆழமான பள்ளம் தோண்டி, கிருமிநாசினி தெளித்து, முதியவரின் உடலை அடக்கம் செய்தனர். இந்த பணியில் முழு கவச உடை அணிந்த சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Next Story