செங்கல்பட்டு மாவட்டத்தில் வேகமெடுக்கும் கொரோனா; ஒரே நாளில் 180 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று 180 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதன்படி சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 35 வயது பெண், 27 வயது பெண், 5 வயது சிறுவன், மறைமலைநகர் பவானி நகர் பகுதியில் வசிக்கும் 41 வயது ஆண், காட்டாங்கொளத்தூர் காந்தி நகர் 4வது தெருவில் வசிக்கும் 60 வயது ஆண், பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 45 வயது ஆண், நின்னகரை பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மண்ணிவாக்கம் மெயின் ரோடு புதுநகர் பகுதியை சேர்ந்த 57 வயது ஆண், கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், ஊரப்பாக்கம் எம்.ஜி.நகர் பத்மாவதி அவென்யூ பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர், 26 வயது இளம்பெண், 50 வயது பெண், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண், 31 வயது வாலிபர், தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 46 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.
180 பேர் பாதிப்பு
கூடுவாஞ்சேரி மூகாம்பிகை குடியிருப்பு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 67 வயது மூதாட்டி, வண்டலூர் ஓட்டேரி 5வது மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் 22 வயது வாலிபர், வண்டலூர் ஊராட்சியில் 22 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள், கண்டிகை பகுதியில் 70 வயது மூதாட்டி ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,620 ஆக உயர்ந்தது. இவர்களில் 1,831 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 87 வயது, 69 வயது மூதாட்டிகள், 61 வயது முதியவர், 55 வயது ஆண் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆனது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பை
காஞ்சீபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 21 இளம்பெண், மணிமங்கலம் மேற்கு மாடவீதியை சேர்ந்த 50 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 87 பேருக்கு கொரோனா உறுதியானது. மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,095 ஆனது. இவர்களில் 538 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 547 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் பலியானார்கள்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 131 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 2,414 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 1,177 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேர் இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story