சென்னையில் ஊரடங்கு மீறல்; 10 ஆயிரத்து 604 பேர் மீது வழக்கு - 10 ஆயிரத்து 665 வாகனங்கள் பறிமுதல்
சென்னையில் முழு ஊரடங்கை மீறியதாக 3 நாட்களில் 10 ஆயிரத்து 604 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை,
முழு ஊரடங்கு தொடங்கிய 3-வது நாளில் இதுவரை ஊரடங்கு விதிகளை மீறியதாக 3,527 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 3 நாட்களிலும் சேர்த்து 10 ஆயிரத்து 604 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மட்டும் 948 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் வாகனங்கள் பறிமுதல் எண்ணிக்கை குறைந்து விட்டது.
3 நாட்களிலும் சேர்த்து 10 ஆயிரத்து 665 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், முககவசம் அணியாதவர்கள் என 1393 பேர் மீது இன்று (நேற்று ) மட்டும் தனியாக வழக்கு போடப்பட்டுள்ளது. 3 நாட்களிலும் சேர்த்து 3517 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
சில தளர்வுகள்
முழு ஊரடங்கில் நாளை (இன்று) முதல் சில தளர்வுகள் மட்டும் இருக்கும். இன்னும் 9 நாட்கள் ஊரடங்கு உள்ளது. அதற்கும் பொது மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு முடிந்த பிறகுதான் திருப்பி ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story