யோகா பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது - மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பேச்சு


யோகா பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது - மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பேச்சு
x
தினத்தந்தி 22 Jun 2020 5:20 AM IST (Updated: 22 Jun 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

யோகா பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்று யோகா தின விழா நடைபெற்றது. இதில் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு, அந்த விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால், இந்திய கலாசாரத்தில் உருவான யோகா இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யோகாவின் பயனை ஒவ்வொரு நாடும் தற்போது உணர தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினத்தை அறிவித்து, நமது கலசாரத்தை அங்கீகரித்துள்ளது.

இது அனைத்து இந்திய மக்களுக்கு பெருமையான விஷயம். யோகா பயிற்சியை ஒரு நாள் மட்டும் செய்யக்கூடாது. இது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒருவரின் மனநிலை, உடல்நிலை, ஆத்மா ஆகியவற்றுக்கு இடையே சரிசமமான நிலையை இந்த யோகா ஏற்படுத்துகிறது.

யோகா பயிற்சி, தன்னம்பிக்கையையும், நமது சுய இலக்கையும் அடைய உதவுகிறது. பழங்காலத்தில் பிராணயாமா பயிற்சி செய்த முனிவர்கள் 300, 400 ஆண்டுகள் வாழ்ந்ததாக உதாரணங்கள் உள்ளன. இதை நம்புவது கடினமாக இருந்தாலும், இது உண்மை. யோகா பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் நாம் கொரோனாவிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.

யோகா பயிற்சி

அதனால் கொரோனாவுக்கு எதிராக போராட ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில், குடும்பத்தினருடன் யோகா பயிற்சி செய்து தங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுதாகர் பேசினார்.

இந்த விழாவில் அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்த், பதிவாளர் சிவானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story