தென்னிலை அருகே கூலி வழங்காததால், செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி போராட்டம் - 2 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு


தென்னிலை அருகே கூலி வழங்காததால், செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி போராட்டம் - 2 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 22 Jun 2020 11:57 AM IST (Updated: 22 Jun 2020 11:57 AM IST)
t-max-icont-min-icon

தென்னிலை அருகே கூலி வழங்காததால் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து 2 மணி நேரத்திற்கு பிறகு அவர் மீட்கப்பட்டார்.

க.பரமத்தி,

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த சத்திரப்பட்டியை சேர்ந்தவர் மருதபாண்டி (வயது 50). இவர் தென்னிலையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் இவருக்கு கொடுக்க வேண்டிய கூலி தொகையை கட்டிடத்தின் ஒப்பந்ததாரர் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மருதுபாண்டி தென்னிலை போலீஸ் நிலையம் பின்பு உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி எனக்கு கூலி வழங்க வேண்டும். இல்லை என்றால் கீழே குதித்து விடுவேன் என மிரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அறிந்த போலீசார் அங்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூலி வழங்கினால்தான் கீழே இறங்குவேன் எனக்கூறினார். இதனையடுத்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மருதுபாண்டியிடம் பேச்சு கொடுத் துக் கொண்டே அருகில் சென்றனர். அப்போது அவரிடம் பணத்தை காண்பித்து கீழே வருமாறு அழைத்தனர்.

இதனையடுத்து பணத்தை பெற மருதுபாண்டி செல்போன் கோபுரத்தில் கீழே இறங்கினார். இதுகுறித்து தென்னிலை போலீசார், ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நேற்று காலை தென்னிலை கடை வீதியில் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story