மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரிகள் மீது புகார் அளியுங்கள் - பொதுமக்களுக்கு, மாநகராட்சி வேண்டுகோள் + "||" + For the treatment of corona Complain to hospitals that charge high fees To the public, the municipal plea

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரிகள் மீது புகார் அளியுங்கள் - பொதுமக்களுக்கு, மாநகராட்சி வேண்டுகோள்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆஸ்பத்திரிகள் மீது புகார் அளியுங்கள் - பொதுமக்களுக்கு, மாநகராட்சி வேண்டுகோள்
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க மாநகராட்சி அழைப்பு விடுத்து உள்ளது.
மும்பை, 

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து மாநில அரசு கொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து உள்ளது. 

இதில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சாதாரண வார்டுக்கு அதிகபட்சம் ஒரு நாளுக்கு ரூ.4 ஆயிரமும், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க ரூ.7 ஆயிரத்து 500, வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்க நாளுக்கு ரூ.9 ஆயிரம் என நிர்ணயம் செய்து உள்ளது. மேலும் இதை கண்காணிக்க மும்பை மாநகராட்சி தணிக்கையாளர்களை நியமித்து உள்ளது.

மாநகராட்சி அழைப்பு

மாநில அரசும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு 80 சதவீத படுக்கை ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உள்ளது. எனினும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட தனியார் ஆஸ்பத்திரி அதிக பணத்தை வசூலித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் குறித்து தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களை மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ பிரிவுகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. கொரோனா சிகிச்சை ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்; உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
3. கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் மருந்து; ஆய்வு மேற்கொள்ள பிரிட்டன் முடிவு
கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் வலி நிவாரணி மருந்து பொருட்களை பயன்படுத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
4. ரெம்டெசிவிர் மருந்து உபயோகத்திற்கு முன் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; இந்திய மருத்துவர்கள்
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை உபயோகிப்பதற்கு முன் பரிசோதனை செய்து கொள்ளும்படி இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
5. கொரோனா சிகிச்சை: இவர்மெக்டின் மருந்துகளை பயன்படுத்த தடை; மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு
கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் இவர்மெக்டின் மருந்துகளை பயன்படுத்த தடை விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.