மாவட்ட செய்திகள்

59 போலீசாருக்கு கொரோனா; பெங்களூருவில் 6 போலீஸ் நிலையங்கள் மூடல் - மந்திரி பசவராஜ் பொம்மை தகவல் + "||" + 59 Corona to police; Closing of 6 Police Stations in Bangalore - Minister Basavaraj Toy

59 போலீசாருக்கு கொரோனா; பெங்களூருவில் 6 போலீஸ் நிலையங்கள் மூடல் - மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்

59 போலீசாருக்கு கொரோனா; பெங்களூருவில் 6 போலீஸ் நிலையங்கள் மூடல் - மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
பெங்களூருவில் 59 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் 6 போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு, 

பெங்களூருவில் 59 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் 6 போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக மாநில போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல், மூச்சுத்திணறல் பிரச்சினை உள்ளவர்களுக்கு கொரோனா பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை கண்காணிப்பு மையங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீசார் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் பெங்களூருவில் 59 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 போலீஸ் நிலையங்களை மூடிவிட்டோம். கொரோனாவை தடுக்க முன்களத்தில் நின்று போராடுபவர்களுக்கு பரிசோதனையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கொரோனா சிகிச்சை

அதே போல், மருத்துவ ஊழியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு கொரோனா சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கப்படும். போலீசாருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தையும் கொடுத்துள்ளோம். இனி வரும் நாட்களிலும் சில உபகரணங்களை வழங்குவோம். 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸ்காரர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளித்துள்ளோம். போலீசாருக்கு பணியை 3 ஷிப்டாக பிரித்துள்ளோம்.

இவ்வாறு மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா; கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 110 பேர் பலி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,007-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.
3. மராட்டியத்தில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவர்- கர்நாடக அரசு
மராட்டியத்தில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
4. ‘இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது’ - ஆக்கி இந்தியா அறிவிப்பு
கொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
5. பெங்களூரை உலுக்கிய பயங்கர சத்தம்; பொதுமகக்ள் அச்சம்
பெங்களூரை உலுக்கிய பயங்கர சத்தத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர் விசாரணை நடத்த கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை