குமரியில் கள பணியாளர்களை தாக்கும் கொரோனா: நாகர்கோவிலில் அரசு டாக்டருக்கு தொற்று
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அரசு டாக்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு தான் அதிகமான தொற்று ஏற்படுகிறது.
இதற்கிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் ஏற்கனவே நர்சுகள், லேப் டெக்னீசியன்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட அரசு டாக்டர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ரெயில் நிலையத்தில் பணிபுரிந்தார்
திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த ரெயிலில் நாகர்கோவில் வந்து சேரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு, சளி மாதிரிகளை சேகரிக்க அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பணியில் ராமனாதிச்சன்புதூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் ரெயில் ஓடத் தொடங்கியதில் இருந்து பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவு நேற்று வெளியானது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சி
இதையடுத்து அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் அவருடன் பணியில் இருந்த நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கும், டாக்டரின் குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் குமரி மாவட்ட அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
இஸ்ரோ என்ஜினீயர்
இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் நெல்லை மாவட்டம் பணகுடி அருகில் உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நாகர்கோவில் சைமன்நகர் பகுதியில் உள்ள இஸ்ரோ காலனியில் குடியிருக்கிறார். அவருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மூலம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் வந்த ராணுவ வீரர் ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் இருந்து வந்தவருக்கு பாதிப்பு
மதுரையைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க நபர், தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் ரெயில் மூலம் நேற்று முன்தினம் நாகர்கோவில் வந்தார். அங்கு பணியில் இருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் 4 பேருக்கும் சளி மாதிரிகளை சேகரித்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் 4 பேரையும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். அதையடுத்து அவர்கள் நாகர்கோவில் வடசேரி சேரமான்புதுத்தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர். கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 37 வயது ஆணுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதியப்பன் தலைமையிலான ஊழியர்கள் நேற்று மாலை சேரமான் புதுத் தெருவுக்கு சென்று மதுரையைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு கொரோனா தொற்றுள்ளவர் என்ற அறிவிப்புடன் கூடிய சிவப்புநிற நோட்டீசை ஒட்டினர்.
கிருமிநாசினி தெளிப்பு
மேலும் அந்த வீடு, அருகில் உள்ள வீடுகள், சுற்றுவட்டார பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று உள்ளவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும், அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் என 9 பேரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கொரோனா தொற்று உள்ளவர் வெளியில் எந்தெந்த பகுதிக்குச் சென்று வந்தார்? என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Tags :
Next Story