மாவட்ட செய்திகள்

மண்டபத்தில் பழுதாகி கிடக்கும் கடலோர போலீஸ் ரோந்து படகுகள் இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டு + "||" + The fishermen allege that there were no maritime police patrol boats in the hall

மண்டபத்தில் பழுதாகி கிடக்கும் கடலோர போலீஸ் ரோந்து படகுகள் இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டு

மண்டபத்தில் பழுதாகி கிடக்கும் கடலோர போலீஸ் ரோந்து படகுகள் இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டு
மண்டபத்தில் பல மாதங்களாக கடலோர போலீசாருக்கு வழங்கப்பட்ட ரோந்து படகுகள் பழுதாகி கிடக்கின்றன. இவை இருந்தும் பயனில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பனைக்குளம்,

தமிழகத்திலேயே மிக முக்கிய கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை கொண்ட மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம். அதற்கு முக்கிய காரணம் இலங்கை மிக அருகாமையில் உள்ளதாலும் அவ்வப்போது இலங்கையில் இருந்து அகதிகள் வந்துசெல்வதோடு தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதும், இங்கிருந்து இலங்கைக்கு கடல்அட்டை மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாலும் இந்த கடல் மற்றும் கடற்கரை பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே விளங்கி வருகிறது.


மண்டபம் முதல் ராமேசுவரம் வரையிலான கடல் பகுதியில் கடலோர போலீசார் ரோந்து செல்ல வசதியாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 12 டன் மற்றும் 5 டன் எடை கொண்ட 2 அதிவேக ரோந்து படகுகள் மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டன.

இந்த நிலையில் மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு கடலோர போலீசாரின் ரோந்து பணிக்காக வழங்கப்பட்ட 2 படகுகளும் பழுதாகி பல மாதங்களாக சரி செய்யப்படாமல் மண்டபம் வடக்கு துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு வெறும் காட்சிப்பொருளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி சி.ஐ.டி.யு. மீன்பிடி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது:-

தமிழகத்திலேயே முக்கிய கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை கொண்ட ராமேசுவரம் கடல் பகுதியில் கடலோர போலீசாரின் ரோந்து பணிக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட 2 ரோந்து படகுகளையும் கடலோர போலீசார் ரோந்து பணிக்கு முழுமையாக பயன்படுத்தியது கிடையாது. ரோந்து படகில் கடலில் ரோந்து செல்ல மாதந்தோறும் அரசால் ஒதுக்கப்பட்டு வரும் டீசலை கூட முழுமையாக பயன்படுத்தாத நிலையே உள்ளது. கடந்த 13-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து 4 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர்.

காட்சிப்பொருள்

இந்த படகுகடலில் மூழ்கி ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மற்ற 3 பேரும் உயிரிழந்துள்ளனர். படகு மூழ்கி கடலில் மாயமாகும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்கக்கூட ரோந்து படகை பயன்படுத்த முடியாத அளவிற்கு 2 படகுகளும் பல மாதங்களாக பழுதான நிலையில் காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே பழுதாகி கிடக்கும் ரோந்து படகுகளை உடனடியாக பழுது பார்க்கவும், கடலில் மீன் பிடிக்க சென்று இயற்கை சீற்றங்களில் சிக்கி படகு மூழ்கி கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் மற்றும் படகை மீட்க கடலோர போலீசாரும் துரித பகுதியில் செயல்பட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் : அதிமுக ஆட்சியில் அதிகார அத்துமீறல்கள் எளிய மக்கள் மீது ஏவிவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு
விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
2. என் மீது இனவெறி துஷ்பிரயோகம்; இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் குற்றச்சாட்டு
எனக்கு எதிராக சமூக ஊடகங்களில் இனவெறி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
3. கடலூர் துறைமுகம் அருகே மாவட்ட நிர்வாகத்திடம் 17 சுருக்குமடி வலைகளை மீனவர்கள் ஒப்படைப்பு
கடலூர் துறைமுகம் அருகே மாவட்ட நிர்வாகத்திடம் 17 சுருக்குமடி வலைகளை மீனவர்கள் ஒப்படைப்பு.
4. சுருக்குமடி வலை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்த மண்டபத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்
நாகையில் சுருக்குமடி வலை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்த மண்டபத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சீர்காழி மீனவ கிராமத்தில் பதற்றம்; போலீசார் குவிப்பு
சீர்காழி மீனவர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.