பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
தமிழ்நாடு சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை வாபஸ் பெறக்கோரியும், ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள அனைவருக்கும் கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யு. ஆட்டோ சம்மேளன மாநில பொது செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க நகர் தலைவர் மாரிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் இளங்குமரன், கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story