திருவள்ளூர் பகுதியில் பலத்த மழை; தொகுப்பு வீடு இடிந்தது
திருவள்ளூர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
திருவள்ளுர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட திருமணிக்குப்பம் கிராமம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். அந்த தொகுப்பு வீடு மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இது குறித்து சத்யராஜ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புதிய வீடு கட்டி தருமாறு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் சத்யராஜ் வீட்டின் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. அவர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story