புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் பலத்த மழை
புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று காலை வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. அவ்வப்போது மேகமூட்டமாக காணப்பட்டது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. அதைத்தொடர்ந்து இரவில் சுமார் 7.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கி அரைமணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷணம் நிலவியது. இதேபோல் நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மீமிசல், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வந்தது. கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மணமேல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. அப்போது இடி, மின்னல் ஏற்பட்டதோடு, பலத்த காற்றும் வீசியது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெயில் வாட்டி வதைத்த நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷணம் நிலவியது.
அன்னவாசல், ஆவூர்
மேலும் அன்னவாசல் பகுதியில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இதில் அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, வீரப்பட்டி, சித்தன்னவாசல், குடுமியான்மலை, வயலோகம், ஆரியூர், மாங்குடி, பரம்பூர், கடம்பராயன்பட்டி, பணம்பட்டி, கூத்தினிப்பட்டி, கீழக்குறிச்சி, பெருஞ்சுனை, இலுப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.
ஆவூர் பகுதியில் மாலை 4 மணி முதல் இடி, மின்னலுடன் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. ஆவூர், ஆம்பூர்பட்டி, பேராம்பூர், ஆலங்குளம், மலம்பட்டி, கத்தலூர், வேலூர், குன்னத்தூர், பாக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த இந்த மழையால் சாலையோர பள்ளங்கள், குளம், குட்டைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இந்த மழை மானாவாரி கோடை உழவு பணிகளை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என்று அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story