பயணிகள் வருகை குறைந்ததால் கரூர் பஸ் நிலையம் வெறிச்சோடியது
பயணிகள் வருகை குறைந்ததால் கரூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
கரூர்,
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக 5-வது கட்டமாக வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பஸ் போக்குவரத்தை 8 மண்டலங்களாக பிரித்து, அந்தந்த மண்டலங்களுக்குள் 50 சதவீத அரசு பஸ்களை இயக்கிய தமிழக அரசு, கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே பொது போக்குவரத்துக்கு அனுமதி என்றும், மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் கட்டாயம் எனவும் நேற்று முன்தினம் அறிவித்தது.
35 சதவீதம் இயக்கம்
இதையடுத்து 294 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த கரூர் மாவட்டத்தில், தற்போது பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அவ்வாறு இயக்கப்பட்ட பஸ்களும், கரூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி சாலையில் குளித்தலை வரைக்கும், கோவை செல்லும் சாலையில் வைரமடை வரைக்கும், ஈரோடு செல்லும் சாலையில் நொய்யல் வரைக்கும், திண்டுக்கல் செல்லும் சாலையில் கூடலூர் வரைக்கும் மட்டுமே இயக்கப்பட்டன. இதிலும் ஒரு சில பயணிகளே பயணம் செய்ததால் கரூர் பஸ் நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதுகுறித்து கரூர் மாவட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் குணசேகரன் கூறுகையில், பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால் 35 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் தான் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும், என்றார்.

Related Tags :
Next Story