திருவள்ளூரில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்


திருவள்ளூரில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்
x
தினத்தந்தி 27 Jun 2020 4:43 AM IST (Updated: 27 Jun 2020 4:43 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக இடைவெளியை மக்கள் மறந்தபடி சென்றது கொரோனாவுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று அமைந்துள்ளது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,277 ஆக உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் 5-வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 

இந்த நிலையில், பொதுமக்கள் ஊரடங்கை மதிக்காமல் திருவள்ளூர் பஜார் வீதியில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனால் கொரோனா வைரஸ் மேலும் பரவும் அபாயம் நிலை உள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பில் திருவள்ளூர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளதால் தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.

Next Story