மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்வு
புதுவையில் மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்களை சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,
மாநிலத்தில் நேற்று 590 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. புதிதாக புதுச்சேரியில் 27 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்னும் 261 பேருக்கு சோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. தற்போது 322 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இதுவரை 14 ஆயிரத்து 267 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றம்
கதிர்காமம் அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நேற்று 19 பேரை பல் மருத்துவக் கல்லூரிக்கும், 25 பேரை ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரிக்கும் மாற்றம் செய்து உள்ளோம். வரும் காலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தினந்தோறும் மார்க்கெட் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இல்லையென்றால் யார் மூலமாவது தங்களுக்கு கொரோனா பரவி விடும். எனவே 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் மார்க்கெட் செல்வது நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story