ஆரணியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேருக்கு கொரோனா


ஆரணியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2020 6:06 AM GMT (Updated: 27 Jun 2020 6:06 AM GMT)

ஆரணியில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆரணி,

ஆரணி நகர தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கும், ஆரணி போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆரணி கோட்டை வேம்புலியம்மன் கோவில் அருகில் உள்ள போக்குவரத்து போலீஸ் நிலையம் பூட்டி சீல் வைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆரணி டவுன், தாலுகா போலீஸ் நிலையங்களிலும், ஆரணி சரக போலீஸ் நிலைய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் போலீசார் 35 பேருக்கும் ஆரணி திருவள்ளுவர் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் செந்தில் தலைமையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

8 பேருக்கு கொரோனா

மேலும் ஆரணி தாலுகாவில் சங்கீதவாடி கிராமத்தில் ஒரு ஆணுக்கும், நடுக்குப்பம் கிராமத்தில் ஒரு பெண்ணிற்கும், கரிப்பூர் கிராமத்தில் ஒரு முதியவருக்கும், மலையாம்புரவடை கிராமத்தில் ஒரு ஆணுக்கும், வண்ணாங்குளம் கிராமத்தில் ஒரு ஆணுக்கும், ஆக மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களை திருவண்ணாமலை, செய்யாறு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

போளூர்

இதேபோல் போளூர் பகுதியில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி காஞ்சீபுரத்தில் இருந்து களம்பூர் வந்த ஆண். சென்னையில் இருந்து படவேடு வந்த ஆண், சின்னபுஷ்பகிரிக்கு வந்த வாலிபர் என 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இவர்களை அத்தியந்தலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தாசில்தார் ஜெயவேல், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

Next Story