மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகேவீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் + "||" + 10 lakhs of liquor bottles seized at home

திருவள்ளூர் அருகேவீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்

திருவள்ளூர் அருகேவீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்
திருவள்ளூர் அருகே பூட்டிய வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர், 

திருவள்ளூர் அருகே பூட்டிய வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை அருகே உள்ள பூட்டிய வீட்டுக்குள் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு, திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீசார் பூட்டிய வீட்டில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வீட்டில் திருட்டுத்தனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் அடங்கிய 92 பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை பிரித்து பார்த்த போது, அதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4,850 மதுப்பாட்டில்கள் இருந்தன.

இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மதுபாட்டில்களை பதுக்கி வைத்த மர்ம நபர்கள் யார் என வலைவீசி தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வாகன சோதனையின்போது பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் சிக்கியது
வாகன சோதனையின்போது பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் சிக்கியது.
2. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.
3. காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை வினியோகம்
காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.
4. மாநில கபடி போட்டி: திருவள்ளூர், ஐ.சி.எப். அணிகள் ‘சாம்பியன்’
வீரன் அழகு முத்துக்கோன் நினைவு மாநில அளவிலான கபடி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது.
5. சென்னை, திருவள்ளூருக்கு குழாய் வழி கியாஸ் வினியோகம்: அதானி நிறுவன வழக்கு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சென்னை, திருவள்ளூருக்கு குழாய் வழி கியாஸ் வினியோகம் செய்வது தொடர்பான, அதானி நிறுவன வழக்கினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.