தர்மபுரி, கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2020 1:59 AM GMT (Updated: 28 Jun 2020 1:59 AM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சங்க மாநில செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் தாசில்தார்கள், வருவாய்த்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத்தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செந்தில்குமார், வட்டக்கிளை தலைவர் சலீம்பாஷா உள்ளிட்டோர் கோரிக்கை குறித்து பேசினர். முடிவில் இணை செயலாளர் தங்கபெருமாள் நன்றி கூறினார்.

கோஷங்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் மரணமடைந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள ரூ.50 லட்சம் நிவாரணத்தொகை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் கருணை அடிப்படையிலான பணியிடம் உடனடியாக வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் காலியாக உள்ள உதவி கலெக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமான ஊழியர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

Next Story