மாவட்ட செய்திகள்

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை + "||" + Extreme inspection of vehicles coming from outer districts at Vikravandi Customs

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனை.
விக்கிரவாண்டி,

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் அவர்கள் மூலம் பிற மாவட்டங்களிலும் தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் அனுமதி பெற்று செல்கின்றனரா? என போலீசார், மாவட்ட எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் உள்ள சோதனைச்சாவடியில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜி, தேவி, சப்-இன்ஸ்பெக்டர் மருது ஆகியோர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி இ-பாஸ் அனுமதி உள்ளதா? என தீவிர சோதனை செய்தனர். அவ்வாறு இ-பாஸ் அனுமதியின்றி வந்த வாகனங்களை, விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து அப்படியே திருப்பி அனுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை
சிறுமுகை வனப்பகுதியில் சோர்வுடன் படுத்திருந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
2. வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள், விழுப்புரம் நகருக்குள் வர தடை போலீசார் தீவிர சோதனை
வெளியூர்களில் இருந்து சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் விழுப்புரம் நகருக்குள் வர போலீசார் தடை விதித்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
3. சப்பானிப்பட்டி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டி சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்யும் பணியை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4. புதுக்கோட்டையில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் சரக்கு வேன் டிரைவர் கைது
புதுக்கோட்டையில் 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். சரக்கு வேன் டிரைவரை கைது செய்தனர்.
5. அமெரிக்காவில் சோதனை தொடங்குகிறது - கொரோனா தொற்றுக்கு மலேரியா மருந்து
அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியாகி, காய்ச்சல், இருமல், சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு மலேரியா மருந்து கொடுத்து சோதிக்கப்பட உள்ளது.