மாவட்ட செய்திகள்

ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது + "||" + Rameshwaram's father beaten to death The plaintiff was arrested

ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது

ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது
ராமேசுவரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமேசுவரம்,

ராமேசுவரம் எம்.ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). இவருக்கு சதீஷ்குமார் (24), இருளேசுவரன்(22) உள்பட 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சதீஷ்குமாருக்கும், இருளேசுவரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அவர்களது தந்தை சந்திரன் கண்டுகொள்ளவில்லையாம்.


இதனால் ஆத்திரமடைந்த இருளேசுவரன் தனது தந்தையிடம் ஏன் தட்டிக்கேட்கவில்லை என சத்தம் போட்டாராம். அப்போது சந்திரன் கம்பால் இருளேசுவரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் தந்தை என்றும் பாராமல் சந்திரனை சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயமடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி, சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து இருளேசுவரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் நிதியுதவியில் போதை பொருள், ஆயுதம் கடத்தல்; போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 4 பேர் கைது
பாகிஸ்தான் நிதியுதவியுடன் போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட போலீஸ் கான்ஸ்டபிள் உள்பட 4 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்து உள்ளனர்.
2. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி; வாலிபர் கைது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது20).
3. கோஷ்டி மோதல்; 2 பேர் கைது
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் அபிஷ்டவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ரவிச்சந்திரன்(வயது53) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
4. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
5. மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு; வாலிபர் கைது
திருப்பூரில் மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.