விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 470 ஆக உயர்வு


விருதுநகர் மாவட்டத்தில் ஒரேநாளில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 470 ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Jun 2020 4:45 AM GMT (Updated: 28 Jun 2020 4:45 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 18,426 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2,610 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 158 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 12 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 470 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நகர்புறங்களில் உள்ளவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அடைந்தவர்களில் 26 பேர் பெண்கள்.

பாதிப்பு

அருப்புக்கோட்டையில் 40 வயது நபர், 29, 38, 16, 19 வயது பெண்கள், 24 வயது நபர். விருதுநகர் ஏ.ஏ. ரோட்டில் 68 வயது முதியவர். ரெயில்வே பீடர் ரோட்டில் 57 வயது பெண், பாண்டியன்நகரில் 38 வயது பெண், கிட்டங்கிதெருவில் 37 வயது நபர், மேலத்தெருவில் 41 வயது நபர், அல்லம்பட்டியில் 23 வயது நபர், அண்ணாமலை தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 47, 32, 26 வயது பெண்கள், 24 வயது வாலிபர் மற்றும் ஒரு வயது ஆண்குழந்தை, ஆர்.எஸ்.நகரில் 46 வயது நபர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தித்துறையில் பணியாற்றும் 41 வயது அதிகாரி, ஆமத்தூரை சேர்ந்த 29 வயது பெண், ஆர்.ஆர்.நகரை சேர்ந்த 22, 21 நபர், வள்ளுவர் நகரை சேர்ந்த 58 வயது ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், சிவகாசி சிறுகுளம் காலனியை சேர்ந்த 56 வயது நபர் உள்பட 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

470 ஆக உயர்வு

இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் அதிகரித்து வரும் நிலையில் முடிவு தெரியாதவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவதில் ஏற்படும் தாமதம் என கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

Next Story