மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று


மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 28 Jun 2020 2:20 PM IST (Updated: 28 Jun 2020 2:26 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,மதுரை போன்ற மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மதுரையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 300 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரை முழுவதும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடதக்கது.

Next Story