அரவக்குறிச்சி நகரில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அரவக்குறிச்சி நகரப்பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சியில் தாலுகா அலுவலகம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் நிலையம், வங்கிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மற்றும் தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதனால் அரவக்குறிச்சி பகுதியில் கரூர் ரோடு, தாராபுரம் ரோடு, திண்டுக்கல் ரோடு ஆகிய பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்பொழுதும் அதிகமாக இருக்கும். சமீபகாலமாக அரவக்குறிச்சி நகரப்பகுதியில் அதிவேகமாகச்செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் தங்கள் உயிரைகையில் பிடித்து பயந்த படியே சென்று வருகின்றனர்.
கோரிக்கை
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில்,. அரவக்குறிச்சி நகரப்பகுதியில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைப்பதே இல்லை. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்்வோர் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, அரவக்குறிச்சியில் கரூர் ரோட்டில் சி.எஸ்.ஐ.தேவாலயம், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பும், ராஜபுரம் ரோட்டில் கதர்கடை அருகிலும் வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story