மாவட்ட செய்திகள்

தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் பலி + "||" + 13-year-old boy killed in Corona ward

தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் பலி

தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் பலி
தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் பலியானான்.
தஞ்சாவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பகட்டுவான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுவன். இவருடைய தந்தை ரேஷன்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் தஞ்சை அண்ணாநகரில் வசித்து வந்தனர். 13 வயது சிறுவனுக்கு தசை மற்றும் இணைப்பு திசு சிதைவு நோய் இருந்து வந்தது.


இந்நிலையில் இச்சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பரிதாப சாவு

இதையடுத்து சிறுவனை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் நேற்று முன்தினம் அதிகாலை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “சிறுவனுக்கு தசை மற்றும் இணைப்பு திசு சிதைவு நோய் பிறவியிலிருந்தே இருந்து வந்தது. இந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவருக்கு இதய இயங்கு விசை 70 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில், 27 சதவீதம் மட்டுமே இருந்தது. இருப்பினும், இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்தான். அவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவனது இறப்புக்கு தசை மற்றும் இணைப்புத்திசு சிதைவு நோய் காரணம்”என்றனர்.

சிறுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடைய உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கொரோனாவால் பலி
கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
2. தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டை சிறுவன் பலி
தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 13 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
3. அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரக்கோணம் மூதாட்டி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரக்கோணம் மூதாட்டி உள்பட 2 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியானார்கள்.
4. மதுரையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி 218 பேருக்கு புதிதாக தொற்று
மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்த மேலும் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் நேற்று ஒரே நாளில் 218 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். இவரோடு சேர்த்து பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.