மாவட்ட செய்திகள்

திருவாரூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள் அடைப்பு வெறிச்சோடிய சாலைகள் + "||" + Stores blocking the corona distribution in Thiruvarur are deserted roads

திருவாரூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள் அடைப்பு வெறிச்சோடிய சாலைகள்

திருவாரூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள் அடைப்பு வெறிச்சோடிய சாலைகள்
திருவாரூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 341 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் பொருட்கள் வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா தொற்று பரவும் அபாய நிலை இருந்து வந்தது.


கடைகள் அடைப்பு

இதையடுத்து கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தினர் ஒரு நாள் கடையடைப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூரில் வர்த்தகர்கள் தங்களுடைய கடைகளை அடைத்தனர். கடைவீதியில் ஜவுளி, நகை, காய்கறி மற்றும் மளிகை கடைகள் உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடை அடைப்பு காரணமாக திருவாரூர் பகுதி முழுவதும் சாலைகள் நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் திருத்துறைப்பூண்டி பகுதியிலும் காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி:‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ‘நீட்’ மற்றும் ‘ஜே.இ.இ.’ தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
2. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், மருத்துவ பணியாளர்களின் உணவு-தங்கும் வசதிக்கு ரூ.40 கோடி - தமிழக அரசு ஒதுக்கீடு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் உணவு, தங்குமிட வசதிகளுக்கான செலவுக்காக ரூ.40 கோடி தொகையை அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
3. கொரோனாவை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு 2 கோடி முக கவசங்கள் - மத்திய அரசு வினியோகம்
கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்காக மாநிலங்களுக்கு 2 கோடி என்-95 முக கவசங்களை மத்திய அரசு வினியோகித்துள்ளது.
4. கொரோனாவுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பலி
சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
5. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார், ஜோகோவிச்
கொரோனா பாதிப்பில் இருந்து ஜோகோவிச் குணமடைந்தார்.