ஈரோட்டில் 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு 46 பேர் சிகிச்சையில் உள்ளனர்


ஈரோட்டில் 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு 46 பேர் சிகிச்சையில் உள்ளனர்
x
தினத்தந்தி 29 Jun 2020 9:34 AM IST (Updated: 29 Jun 2020 9:34 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 46 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை முற்றிலும் பாதுகாக்க, ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு உள்ளார். இதுபோல் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் தலைமையில் போலீசார் எல்லைப்பகுதிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோட்டில் கொரோனா பாதிப்பு தினசரி உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில், ஈரோடு மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இத்துடன் மாவட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது. 10 பேரில் 7 பேர் பிற மாவட்டங்களில் இருந்து தொற்றுடன் வந்தவர்கள். இதில் 34 வயது பெண் ஒருவர் தற்போது திருச்சியில் உள்ளார். இவர் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்.

46 பேருக்கு சிகிச்சை

சித்தோடு பகுதியை சேர்ந்த 31 வயது ஆண், 48 வயது ஆண், 60 வயது மற்றும் 28 பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் பவானியை சேர்ந்த 45 வயது பெண், 21 வயது ஆண், 47 வயது ஆண் மற்றும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 48 வயது ஆண், 38 வயது பெண் ஆகிய 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.

மொத்தம் 46 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 742 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று புதிதாக 122 பேர் தனிமை பட்டியலில் சேகரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

282 பேர் 14 நாட்கள் நிறைவடைந்து தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story