ராமநாதபுரத்தில் 63 பேருக்கு கொரோனா ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி பலி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 800 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று கீழக்கரை வடக்குத்தெரு 60 வயது நபர், ராமநாதபுரம் அண்ணாநகரில் 19 வயது பெண், கீழக்கரையை சேர்ந்த 60 வயது நபர், ராமநாதபுரத்தில் ஒரு மாத ஆண் குழந்தை, கொத்தங்குளம் 57 வயது நபர், வசந்தநகர் 51 வயது நபர், 36 வயது நபர், பரமக்குடி ஜவகர் தெரு 30 வயது பெண், 7 வயது மகள், பாம்பூர் 48 வயது நபர், பரமக்குடி எஸ்.எஸ்.கோவில் தெரு 48 வயது நபர், ராமநாதபுரம் தையல்பாகம் சந்து 27 வயது பெண், ராமநாதபுரம் வடக்குத்தெரு 23 வயது பெண், தேவிபட்டினம் ரோடு 57 வயது பெண், தெற்குரத வீதி 50 வயது நபர், மதுரையார் தெரு 53 வயது நபர், அவரின் 27 வயது மகன், தேவிபட்டினம் ரோடு 58 வயது நபர், ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த 57 வயது பெண் டாக்டர், முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரி ரோடு 61 வயது நபர், அவரின் 57 வயது மனைவி உள்பட 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 863 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் ராமநாதபுரம் வசந்தநகரை சேர்ந்த 51 வயது ஆட்டோ டிரைவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தாங்களாகவே விழிப்புணர்வுடன் செயல்பட்டு முக கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்த்தல் போன்றவைகளை மேற்கொண்டால் மட்டுமே நோய்தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story