மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கேட்கும் வாசகம் அடங்கிய முககவசம்; கனிமொழி எம்.பி விழிப்புணர்வு பிரசாரம் + "||" + Justice cover for the Satankulam incident; Kanimozhi MP awareness campaign

சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கேட்கும் வாசகம் அடங்கிய முககவசம்; கனிமொழி எம்.பி விழிப்புணர்வு பிரசாரம்

சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கேட்கும் வாசகம் அடங்கிய முககவசம்; கனிமொழி எம்.பி விழிப்புணர்வு பிரசாரம்
சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கேட்கும் வாசகம் அடங்கிய முககவசம் அணிந்து கனிமொழி எம்.பி நூதன விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி,

சாத்தான்குளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி நூதன விழிப்புணர்வு பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார். அப்போது அவர் சாத்தான்குளம் தந்தை, மகன் சாவுக்கு நீதி கேட்கும் வாசகம் அடங்கிய முக கவசம் அணிந்து வந்தார். தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு முக கவசங்களை அவர் வழங்கினார்.

தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை வந்தனர்
சாத்தான்குளம் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்வதற்காக 7 சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை வந்தனர்.
2. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
3. சாத்தான்குளம் தந்தை,மகன் உயிரிழப்பு விவகாரம் : கைதான காவலர்களில் 3 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
4. சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: சம்பவ இடங்களில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் ஆய்வு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சம்பவ இடங்களில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் மீண்டும் ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.