மழைக்கால நிலச்சரிவை தடுக்க மலை மீது ஏறி பராமரிப்பு பணியில் ஈடுபடும் - மத்திய ரெயில்வே ஊழியர்கள்
மழைக்கால நிலச்சரிவை தடுக்க மத்திய ரெயில்வே ஊழியர்கள் மலை மீது ஏறி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை,
மும்பை - புனே ரெயில் பாதையில் கர்ஜத் அருகே போர் காட் மலை பகுதியும், கசாரா - இகத்புரி இடையே துல் காட் பகுதியும் உள்ளது. இந்த பகுதியில் மழைக்காலங்களில் நிலச்சரிவு, பாறைகள் விழுவதால் அடிக்கடி ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது உண்டு.
இந்தநிலையில் இந்த ஆண்டு இங்குள்ள மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க மத்திய ரெயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சி பெற்ற வீரர்கள் ஷூ, கயிறு, ஹெல்மட், கையுறை, சுத்தியல், தொலைநோக்கி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் மலையில் ஏறி சரிந்து விழும் நிலையில் உள்ள பாறைகளை அப்புறப்படுத்துகின்றனர். மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள மண்குவியல்களையும் அகற்றுகின்றனர்.
இது குறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர் கூறுகையில், ‘‘மலைப்பகுதியை ரெயில்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல ரெயில்வே ஊழியர்கள் இந்த கடினமான சூழலிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த உயரிய, பிரமிப்பான பணியில் 10 மலையேறும் குழுவினர் போர் காட், துல் காட்டில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.

Related Tags :
Next Story