மாவட்ட செய்திகள்

போலீஸ்காரருக்கு கொரோனா பெரியகடை போலீஸ் நிலையம் மூடப்பட்டது + "||" + To Policeman The Corona Great Sea The police station was closed

போலீஸ்காரருக்கு கொரோனா பெரியகடை போலீஸ் நிலையம் மூடப்பட்டது

போலீஸ்காரருக்கு கொரோனா பெரியகடை போலீஸ் நிலையம் மூடப்பட்டது
போலீஸ்காரருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால் புதுவையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேரு வீதியில் உள்ள பெரியகடை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த போலீஸ் நிலையம் கிருமி நாசினி தெளித்து இழுத்து மூடப்பட்டது. பெரியகடை போலீஸ் நிலையம் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடத்துக்கு எதிரே உள்ள கூடாரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.


அந்த கட்டிடத்தின் மேல் மாடியில் செயல்பட்டு வந்த கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும் மூடப்பட்டது. தற்காலிகமாக இந்த அலுவலகம் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

சிறைக் கைதிகள் மற்றும் போலீசாருக்கு கொரோனா பரவி வருவது போலீஸ் வட்டாரத்தை பீதி அடைய வைத்துள்ளது.

புதுவை நகராட்சி அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த அலுவலகம் செயல்பட்டு வந்த கம்பன் கலையரங்கம் வளாகமும் மூடப்பட்டது. அந்த வளாகத்தில் உள்ள நகராட்சி ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட மற்ற அலுவலகங்களும் மூடப்பட்டன. இதையடுத்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீஸ்காரருக்கு கொரோனா
மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு பணியாற்றிய 120-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. ராஜபாளையம் பட்டாலியனில் புதிதாக பணியில் சேர்ந்த போலீஸ்காரருக்கு கொரோனா - விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 45-ஆக உயர்வு
ராஜபாளையம் பட்டாலியனில் புதிதாக பணியில் சேர்ந்த போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது.