தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் ‘தரமான விசாரணை நடத்தப்படும்’ சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் பேட்டி
தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், ‘தரமான விசாரணை நடத்தப்படும்’ என்று சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தெரிவித்தார்.
சாத்தான்குளம்,
தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், ‘தரமான விசாரணை நடத்தப்படும்’ என்று சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தெரிவித்தார்.
முதல் தகவல் அறிக்கை திருத்தம்
தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் 12 குழுக்களாக பல்வேறு இடங்களிலும் சென்று, ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை திருத்தப்படும். இதுதொடர்பாக இரவுக்குள் முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் தரமான விசாரணை நடத்தப்படும். பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொலை வழக்காகமாற்றி பதிவு செய்ய...
முன்னதாக அவர், தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறுகையில், “சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு விசாரணைக்காக வந்துள்ளோம். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்வது குறித்து, விசாரணைக்கு பிறகு முடிவு செய்யப்படும்“ என்று கூறினார்.
Related Tags :
Next Story