கூட்ட நெரிசலை தவிர்க்க மும்பையில் கூடுதலாக 300 மின்சார ரெயில் சேவைகள்
கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க மும்பையில் கூடுதலாக சுமார் 300 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
மும்பை,
கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க மும்பையில் கூடுதலாக சுமார் 300 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
மீண்டும் மின்சார ரெயில்சேவை
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மும்பையில் 3 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் 15-ந் தேதி மீண்டும் மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரெயில்களில் மாநில அரசால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் என அடையாளம் காணப்பட்டவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். மத்திய ரெயில்வே வழித்தடத்தில் 200 சேவைகளும், மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 202 சேவைகளும் என தினசரி 402 சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.
மத்திய அரசு அனுமதி
இந்த நிலையில் மின்சார ரெயில்களில் மத்திய அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி., சுங்கவரித்துறை, தபால் ஊழியர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள், மும்பை துறைமுக ஊழியர்கள், நீதித்துறை மற்றும் ராஜ்பவன் ஊழியர்கள் ஜூலை 1-ந் தேதி முதல் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கடந்த 27-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.தற்போது மத்திய அரசின் அறிவிப்பின் காரணமாக பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க மத்திய மற்றும் மேற்கு ரெயில்வேக்கள் மின்சார ரெயில் சேவைகளை அதிகரித்து உள்ளன.
இதன்படி மத்திய ரெயில்வே 150 சேவைகளையும், மேற்கு ரெயில்வே 148 சேவைகளையும் கூடுதலாக இயக்க முடிவு செய்துள்ளன. இதன்படி 2 வழித்தடங்களிலும் தினசரி 700 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
Related Tags :
Next Story