கொரோனாவுக்கு 93 வயது மூதாட்டி பலி மேலும் 24 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் நேற்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு 93 வயது மூதாட்டி பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நேற்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவுக்கு 93 வயது மூதாட்டி பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
24 பேர் பாதிப்பு
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் 633 பேருக்கு புதிதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 19 பேரும், ஜிப்மரில் 4 பேரும், காரைக்காலில் ஒருவரும் என சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 53 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தர்மாபுரியை சேர்ந்த 93 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
824 பேர் பாதிப்பு
புதுவை மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை 824 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 427 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 384 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 18,791 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 282 பேருக்கு முடிவுகள் வர வேண்டியுள்ளது.
நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 3 பேரும், 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 21 பேரும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக நேற்று 11 ஆண்களும் 13 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story