பாதிப்பை குறைத்து காட்டுவதற்காக கொரோனா பரிசோதனை குறைந்த எண்ணிக்கையில் செய்யப்படுகிறது பட்னாவிஸ் குற்றச்சாட்டு
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுவதற்காக குறைவான எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பை குறைத்து காட்டுவதற்காக குறைவான எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
இறப்பு தாமதமாக பதிவு
மராட்டியத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை சரியாக தெரிவிக்காமல் மாநில அரசு மறைத்து வருவதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் முதல்-மந்திரிக்கு ஏற்கனவே 2 முறை கடிதம் எழுதி உள்ளார்.
இந்தநிலையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு புதிதாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பதாவது:-
மராட்டியத்தில் கொரோனாவால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் மிகவும் தாமதமாகவே பதிவு செய்யப்படுகின்றன. இந்த பிரச்சினையை அடிக்கடி எழுப்பி வருகிறேன். இருப்பினும் அது சரியாக கவனிக்கப்படவில்லை. இறந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கூடாது என்ற மாநில அரசின் புதிய உத்தரவு ஆபத்தானது. இது அவர்களின் குடும்பத்தினருக்கும், கொரோனாவுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும் தொற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும்.
குறைவான பரிசோதனை
மாநிலத்தின் கொரோனா பரிசோதனைக்கான மொத்த தேவையுடன் ஒப்பிடும் போது, தற்போதைய பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
தொற்று பாதிப்பை குறைத்து காட்டுவதற்கு பரிசோதனை எண்ணிக்ைக குறைவாக செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story