மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு பலி


மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு பலி
x
தினத்தந்தி 4 July 2020 5:06 AM IST (Updated: 4 July 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு உயிரிழந்தார்.

திருவொற்றியூர்,

சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் போலீஸ் ஏட்டுவாக பணிபுரிந்து வந்தவர் தேசிங்கு(வயது 43). இவர், திருவொற்றியூர் குப்பம் பட்டினத்தார் கோவில் தெருவில் வசித்து வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர், தனது மகள்களுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் விளையாடினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக தேசிங்கு, கால் தவறி மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story